/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
/
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
ADDED : ஜன 02, 2026 05:54 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் மின்கம்பங்களில் விதிமுறை மீறி தொங்கவிடப்படும் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மின் கம்பங்களில் தெருவிளக்குகள் எரிகிறதோ இல்லையோ, அவை விளம்பர பலகைகள் தொங்கவிடப்படும் இடமாக மாறியுள்ளன.
ஒவ்வொரு கம்பங்களிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் தொங்குகின்றன. அரசியல் கட்சியினர் விளம்பரம், தனியார் வர்த்தக நிறுவன விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இவை காற்றில் வேகமாக ஆடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
மின் விபத்துகளை தவிர்க்கவும், மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மின்வாரியம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், மின்வாரியம், மின்விபத்து ஏற்படும் வகையில் விளம்பர பலகைகளை தொங்க விடுவதை கண்டுகொள்வதில்லை, நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால், விளம்பர பலகைகள் வைப்பது நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கம்பத்தின் கீழ் பகுதி முதல், மேல் பகுதி வரை பதாகைகள் தொங்க விடுவதால், மின் பழுது நீக்கம் போன்றவைக்கு கம்பம் ஏறும் மின்வாரிய பணியாளர்கள் திணறுகின்றனர்.
இவை காற்றில் வேகமாக ஆடுவதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.நாளுக்குநாள் அதிகரித்த விளம்பர பலகைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது. விதிமுறை மீறி இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பாரபட்சம் இல்லாத நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மின் விபத்துகளை தடுக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.

