ADDED : ஜூலை 10, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பயணிகளின் வசதிக்காக ரயில்களின் புறப்படும் நேரத்தை ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
பொள்ளாச்சி - கோவை (56110) பயணிகள் ரயில், இன்று முதல், பொள்ளாச்சியில் இருந்து காலை 8:00 மணிக்கு பதில் காலை 7:50 மணிக்கு புறப்படும். கிணத்துக்கடவுக்கு காலை 8:13 மணிக்கு வந்து, காலை 8:14 மணிக்கு புறப்படும். போத்தனுார் சந்திப்புக்கு, காலை 8:36 மணிக்கு வந்து காலை 8:37 மணிக்கு புறப்படும். கோவை சந்திப்புக்கு காலை 9:25 மணிக்கு பதில் காலை 8:55 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல், பாலக்காடு டவுன் - கோவை(66606) மெமு ரயில், கோவை சந்திப்புக்கு, காலை 9:05 மணிக்கு பதில், காலை 9:10 மணிக்கு வந்து சேரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.