/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் வழியாக பெங்களூருவுக்கு ரயில்
/
போத்தனுார் வழியாக பெங்களூருவுக்கு ரயில்
ADDED : அக் 03, 2025 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயிலை, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வரும் 4 முதல் 18ம் தேதி வரை, பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06219), மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். இந்த ரயில், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு போத்தனுாரை வந்தடையும்.
மறு மார்க்கத்தில், வரும் 5 முதல் 19ம் தேதி வரை, ஞாயிறுதோறும் காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06220), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 மணிக்கு போத்தனுாரை வந்தடையும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.