/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிற்சி மருத்துவருக்கு பாம்புக்கடியா; அரசு மருத்துவமனையில் பரபரப்பு

ADDED : டிச 24, 2024 07:14 AM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் ஜெயக்குமார். பயிற்சி மருத்துவராக உள்ள இவரை, பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வருவதாக, தகவல் பரவியது. இத்தகவல் சக மருத்துவ மாணவர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, டீன் நிர்மலா கூறியதாவது:
முதுநிலை இரண்டாமாண்டு படிக்கும் ஜெயக்குமார்; பயிற்சி முடிந்து செல்லும் போது ஏதோ கடித்துள்ளது. இரவில் திடீரென்று வலி அதிகமானதால், எழுந்து பார்த்துள்ளார். வலித்த இடத்தில் இரண்டு புள்ளி போன்று காயம் இருந்துள்ளது. கடித்தது பூச்சியா அல்லது வேறு விஷ பூச்சிகளா என அவருக்கும் தெரியவில்லை.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் இருக்கிறார். மருத்துவமனை வளாகத்தில் பணியாளர்கள் தங்குமிடம், பிற இடங்களை துாய்மையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, ஒப்பந்த பணியாளர்களிடம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கூறினார்.