/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்து பயிற்சி
/
இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்து பயிற்சி
ADDED : பிப் 19, 2025 10:14 PM
சூலுார்; கடந்த, ஜன., 6 ம்தேதி வெளியிடப்பட்ட சூலுார் சட்டசபை தொகுதியில், இறுதி வாக்காளர் பட்டியல் படி, 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 86 ஆண்கள், 1 லட்சத்து, 72 ஆயிரத்து, 126 பெண்கள், 99 மூன்றாம் பாலினத்தவர், என, 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 311 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இரட்டைப்பதிவு, இறந்தவர்கள், நிரந்தரமாக வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் குறித்து தேர்தல் பிரிவினர் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சூலுார் தாசில்தார் சரண்யா பேசுகையில், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கவேண்டும் என, அரசியல் கட்சியினர் மனுக்களை அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணையமும் இறந்தவர்களின் பெயர்களை, கள ஆய்வு செய்து நீக்கவேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது. அதனால், இப்பணியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபடவேண்டும், என்றார்.
சூலுார் சட்டசபை தொகுதி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் பேசுகையில்,முதல் கட்டமாக, சூலுாரில் உள்ள, 27 பாகங்களுக்கான பயிற்சி நடக்கிறது. இரட்டை பதிவு, இறந்தவர்கள், நிரந்தரமாக வெளியேறியவர்களை பட்டியலிட வேண்டும்.
இறந்த வாக்காளரின் இறப்பு சான்றிதழை பெற வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் படிவம், 7 கொடுத்து கையெழுத்து பெற வேண்டும்.
அதன்பின் தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதல் படி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

