/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பூட்டிய பொருள் தயாரிக்க வேளாண் பல்கலையில் பயிற்சி
/
மதிப்பூட்டிய பொருள் தயாரிக்க வேளாண் பல்கலையில் பயிற்சி
மதிப்பூட்டிய பொருள் தயாரிக்க வேளாண் பல்கலையில் பயிற்சி
மதிப்பூட்டிய பொருள் தயாரிக்க வேளாண் பல்கலையில் பயிற்சி
ADDED : செப் 07, 2025 09:34 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறு தானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, 9, 10ல் நடக்கிறது. பல்கலையில் உள்ள வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி நடக்கிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,770 செலுத்த வேண்டும்.
* தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனைப் பிரித்தெடுத்தல் உட்பட தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி, இன்று நடக்கிறது.
காலை 9 மணிக்கு பூச்சியியல் துறையில், அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சி கட்டணம் ரூ.590 நேரடியாக செலுத்த வேண்டும். இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும். காலை 9 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடக்கிறது.
* பல்கலையின் பயிர் நோயியல் துறை சார்பில், காளான் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி இன்று நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், பயிர் நோயியல் துறையில் பயிற்சி கட்டணம் ரூ.590 நேரடியாக செலுத்த வேண்டும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். காலை முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.