நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
நுாறுநாள் வேலை திட்ட களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், திருப்பூரில் நடந்தது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உதவி பொறியாளர்கள், பணி பார்வையாளர், கம்ப்யூட்டர் உதவியாளர் பங்கேற்றனர். நுாறுநாள் வேலை பொறியாளர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்வகையில், 'யுக்தாரா' செயலியில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. 'நுாறுநாள் வேலை திட்ட பணி நடைபெறும் இடம் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டுவிடும்; இதனால், ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மீண்டும் பணி நடைபெற்றதாக பதிவு செய்வது உள்ளிட்ட தவறுகள் நடைபெறாமல் தடுக்கப்படும்' என அறிவுறுத்தப்பட்டது.

