/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 22, 2025 10:03 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் முகாமினை துவக்கி வைத்தார். தாசில்தார் வாசுதேவன், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விளக்கினார்.
தேர்தல் பிரிவு துணை பிரிவு தாசில்தார் தவமணி, பயிற்சியை ஒருங்கிணைத்தார். கருத்தாளர் கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவக்குமார், முதுகலை ஆசிரியர் சங்கரபாண்டியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் நிலையான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அலுவலர்களின் கடமைகள், பொறுப்புகள், பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள் குறித்து விளக்கப்பட்டன.