/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா
/
சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா
ADDED : செப் 25, 2024 09:14 PM
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் பணி அமர்த்தப்படுகின்றனர்.
இங்கு பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா இம்மாதம், 28ம் தேதி காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் பயிற்சி கல்லூரியின் முதல்வர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விழாவில், வீரர்களின் அணிவகுப்பு, உறுதிமொழி ஏற்பு, சிறப்பு விருந்தினர் உரை, வீரர்களின் சாகச நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.

