நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில், 2ம் நிலை காவலர் பணிக்கு தேர்வான, 184 போலீசாருக்கு கோவை பி.ஆர்.எஸ்., பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு விழா, பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில், நேற்று மாலை நடைபெற்றது.விழாவுக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.