தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்சி

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்சி

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : டிச 20, 2024 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; ஆனைமலை அருகே பூவலப்பருத்தியில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி, இடு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா, ஆனைமலை அருகே பூவலப்பருத்தியில் நடந்தது.

தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், தென்னை பருவநிலை மாற்றத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சாகுபடி முறைகள், மண் பரிசோதனையின் அவசியம், மண் பரிசோதனை அடிப்படையில் மரங்களுக்கு உரமிடுதல் குறித்து விளக்கினார்.

மேலும், இளநீர் ரக தென்னங்கன்றுகளின் காய்ப்புத்திறன், அவற்றின் பயன்பாடு குறித்து குள்ளேகவுண்டனுார் முன்னோடி விவசாயி லோகநாதன் பேசினார்.

பேராசிரியர் (உழவியல்) தவபிரகாஷ், தென்னையில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இணைப்பேராசிரியர் (பூச்சியியல்) அருள்பிரகாஷ், தென்னையை தாக்கும் பூச்சிகள் குறித்தும், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு கட்டுப்பாடு குறித்து விளக்கினார்.

இதில், பங்கேற்ற பயனாளிகளுக்கு இளநீர் ரக தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா எதிர் உயிர்கள், தென்னை டானிக் போன்ற இடு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, தென்னை ஆராய்ச்சி நிலைய அலுவலர் பஞ்சலிங்கம், ஆய்வக நுட்புனர் மற்றும் பண்ணை பணியாளர்கள் செய்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us