/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி
/
கோவை உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 30, 2025 09:23 PM
கோவை; செறிவூட்டப்பட்ட உணவு பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், மண்டல அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள, நகர்நல மேம்பாட்டு மையத்தில் பயிற்சி நடந்தது.
இயற்கை உணவில் இல்லாத, நுண்ணுாட்டச்சத்துக்களை செயற்கையாக உணவில் சேர்ப்பது, செறிவூட்டப்பட்டப்பட்ட உணவு. இந்தியாவில், '+ F' என்ற லோகோ பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவு உண்பதால், நுண்ணுாட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
செறிவூட்டப்பட்ட உணவு குறித்து, பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா விடம் கேட்டபோது, ''அரிசி, கோதுமை, பால், உப்பு, எண்ணெய் ஆகிய உணவுகளில், வைட்டமின் ஏ, டி, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. பொதுமக்கள், '+ F' லோகோ பயன்படுத்தப்பட்ட உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்,'' என்றார்.