ADDED : ஆக 12, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்கம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 துணை கலெக்டர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.
வேளாண் பல்கலையின் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், வேளாண் பொறியியல், மதிப்புக்கூட்டல், விதை உற்பத்தி மற்றும் வினியோக முறை, வேளாண் காலநிலை, தோட்டக்கலையில் உயர் தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், மண்புழு உற்பத்தி தொழில்நுட்பம், பயிர் உயிரியல் தொழில்நுட்பம், அங்கக வேளாண்மை, தொலைதூரக் கல்வி மற்றும் கல்வி ஊடக மைய செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், தலைவர் ஆனந்தராஜா, பேராசிரியர் கேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.