/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி
/
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 04, 2026 05:18 AM

பீளமேடு: தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பகல்லூரியில் நடந்த இப்பயிற்சியில்கோவை உட்பட ஈரோடு, உதகை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை, தேர்தல் பணியாளர்கள் மற்றும் முப்படை வீரர்களுக்கான தபால் ஓட்டு நடைமுறைகள், 'சி-விஜில்' புகார் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டர் பவன்குமார் கூறுகையில், அலுவலர்கள் சந்தேகங்கள் எழும்போது சீனியர் அதிகாரிகளை அணுக வேண்டும். எந்தவொரு முடிவையும் எழுத்துப்பூர்வமான உத்தரவின்றி எடுக்க கூடாது,'' என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

