/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் பயிற்சி
/
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் பயிற்சி
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் பயிற்சி
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் பயிற்சி
ADDED : ஆக 07, 2025 10:02 PM

கோவை; இந்தோனேசியா, வியட்நாம் நாட்டு மாணவர்கள் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட்டது.
சர்வதேச இன்டர்ன்ஷிப் திட்டத்தில், இந்தோனேசியா, டெல்காம் பல்கலை, வியட்நாம் ஹோ சி மின் பேங்கிங் பல்கலைகளை சேர்ந்த மாணவர்கள் ஜூலை, 23 முதல் ஆக., 4 வரை கிணத்துக்கடவு, கோவை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் தங்கினர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் வணிக செயல்திறனுக்கான செயற்கை நுண்ணறிவு, எனும் தலைப்பில் தொழில்நுட்ப அறிவை பெற சிறப்பு அமர்வுகளில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு இந்திய, தமிழக கலாசாரம் குறித்து கற்றுத்தரப்பட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட நேரடி செயல்விளக்கம் வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோயுகி, வி.வி.டி.என்., லட்சுமணன், ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் முதல்வர் சுதா மோகன்ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.