/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி: செவிலியர் பிரிவு மாணவியருக்கு பயிற்சி
/
கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி: செவிலியர் பிரிவு மாணவியருக்கு பயிற்சி
கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி: செவிலியர் பிரிவு மாணவியருக்கு பயிற்சி
கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி: செவிலியர் பிரிவு மாணவியருக்கு பயிற்சி
ADDED : நவ 09, 2025 11:11 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 செவிலியர் பிரிவு பயிலும் மாணவியர், கடந்த மாதம், 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை, கோட்டூர் ஆல்வா மருத்துவமனையில் அகப்பயிற்சி பெற்றனர்.
அதில், மாணவியர் தங்களது பாடப்பகுதிகளில் படிக்கும் கருத்துக்களை செயல் விளக்கம் வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டனர்.
இந்த பயிற்சி காலத்தில் மருத்துவ கருவிகளை கையாளுதல், ரத்தப் பரிசோதனை செய்தல், ரத்த அழுத்தம் பார்த்தல், சர்க்கரை நோயின் அளவை கண்டறிதல், ஆவி பிடித்தல் போன்ற பல செயல்முறை விளக்கங்களை மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வாயிலாக தெரிந்து கொண்டனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவுபடி செவிலியர் படிப்பு பிரிவு மாணவியருக்கு அகப்பயிற்சி நிறைவு செய்தமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி வரவேற்றார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து, சான்றிதழ்களை வழங்கி மாணவியரை பாராட்டினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தண்டபாணி, மாணவியரை எதிர்காலத்தில் உயர் கல்வியில் சேர்வது குறித்து விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் தர்மு, கோட்டூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

