/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனத்தில் அத்துமீறி பயணம்
/
சரக்கு வாகனத்தில் அத்துமீறி பயணம்
ADDED : நவ 09, 2025 11:11 PM

நெகமம்: பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில் சரக்கு வாகனத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி மக்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த ரோட்டில், சரக்கு வாகனங்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, அதிகளவில் மக்கள் பயணிக்கின்றனர். வாகனத்தின் பின்பகுதியில், பாடியில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சிறிய நான்கு சக்கர சரக்கு வாகனங்களில், அதிக எண்ணிக்கையில் மக்கள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். இதனால், வேகத்தடை, குறுக்கு பட்டை, வளைவுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்லும்போது, விபத்து அபாயம் உள்ளது.
இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதை தவிர்க்க, சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

