/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
/
இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 15, 2024 11:33 PM
கோவில்பாளையம்; இயற்கை வேளாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு காளப்பட்டியில் நடந்தது.
சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் துறை சார்பில், காளப்பட்டியில் நடந்த இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வகுப்பில் வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா வரவேற்றார்.
காரமடை வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த சுரேஷ் பேசுகையில், ''இயற்கை வேளாண்மையில் மண்வளம் முக்கியம். மண்ணின் வளத்தை பராமரிக்க வேண்டும். அசோலா வளர்ப்பது மண்ணின் வளத்துக்கு உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
ஓய்வு பெற்ற துணை இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல் பேசுகையில், ''மண்புழு உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டுக்கு உபயோகித்து மீதமுள்ளவற்றை விற்பனை செய்யலாம். இதனால் ரசாயன உர பயன்பாடு குறையும்,'' என்றார்.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் மாரியப்பன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விளக்கினார்.
வேளாண் துணை அலுவலர் வேலுச்சாமி இயற்கை விவசாயம் குறித்து பேசினார். பங்கேற்ற விவசாயிகளுக்கு மண்புழு உர தொகுப்பு வழங்கப்பட்டது. விவசாயிகள், 'அட்மா' அலுவலர்கள் பங்கேற்றனர்.

