/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல்; வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
/
தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல்; வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல்; வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல்; வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 17, 2025 10:55 PM
- நமது நிருபர் -
தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ, வேர் வாடல் நோய் மற்றும் இதர பூச்சி, நோய் மேலாண்மை குறித்த பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம், வேளாண் பல்கலையில் நடந்தது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின், காசர்கோடு மத்திய மலைப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில், கூட்டம் நடந்தது. மத்திய மலைப்பயிர்கள் ஆராய்ச்சி நிலை இயக்குநர் பாலச்சந்திர ஹெப்பர், தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்க் காரணிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
விஞ்ஞானி சுப்ரமணியம், தென்னை மரங்களில் மகசூல் அதிகரிக்கும் உத்திகள் குறித்து விளக்கினார். விஞ்ஞானி தவப்பிரகாசம், பாக்கு மரங்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினார்.
தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன், வேளாண் துணை இயக்குநர் (தென்னை) மீனாகுமரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா மற்றும் தமிழகம் முழுதும் இருந்து தோட்டக்கலை அலுவலர்கள், உதவி இயக்குநர்கள், 80 பேர் பங்கேற்றனர்.