ADDED : மார் 29, 2026 09:12 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், சட்டசபை தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் ஒரு பகுதி என, 281 ஓட்டுச்சாவடிகள் உள்ளது.
அடுத்த மாதம் நடக்கும் தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இந்த முகாமிற்கு பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில், தேர்தல் பிரிவு அலுவலர்கள், நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள், வாக்காளரிடம் நடந்து கொள்ளும் முறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
