/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை உற்பத்தியாளர்களுக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி
/
விதை உற்பத்தியாளர்களுக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி
விதை உற்பத்தியாளர்களுக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி
விதை உற்பத்தியாளர்களுக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி
ADDED : ஆக 26, 2025 10:15 PM
- நமது நிருபர் -
கோவை மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை வாயிலாக, அரசு உதவி விதை அலுவலர்களுக்கும், அரசு சாரா விதை உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுக்கும் விதைச் சான்று நடைமுறை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் மாரிமுத்து, சான்று விதைகளின் முக்கியத்துவம், சான்று விதை உற்பத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து விளக்கினார்.
சம்பா நெல் சாகுபடி துவங்கியுள்ளதால், விதை உற்பத்தியாளர்கள் இப்பட்டத்தைத் தவறவிடாமல் நெல் விதைப் பண்ணைகளை அமைத்து, அதை துறையில் பதிவு செய்யும்படி வலியுறுத்தினார்.
விதைப்பு அறிக்கை தயாரித்தல், பதிவு செய்தல், வயலாய்வு பணி, கலவன் நீக்கல், மகசூல் கணக்கிடுதல், சிறுதானிய பயிர் ரகங்களின் குணங்கள் கண்டறிதல், விதை சுத்தி, விதை மாதிரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
விதைச்சான்று அலுவலர்கள் சதாசிவம், ஹேமலதா, பிரியதர்ஷினி, பாரதி, சத்யா, துளசிமணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.