ADDED : அக் 15, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12 ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு இண்டன்ஷிப் எனும் அகப்பயிற்சி முத்துக்கவுண்டன் புதூர் 'சிரா' இன்ஜினியரிங் தொழிற்சாலையில் அளிக்கப்பட்டது.
தொழிற்கல்வி அடிப்படை இயந்திரவியல் பிரிவை சார்ந்த மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். இயந்திரங்களை இயக்குவது, வெல்டிங், பெயிண்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் கதிர்வேல், தங்கவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.