/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எண்ணும் எழுத்தும்' ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
'எண்ணும் எழுத்தும்' ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 10, 2025 09:49 PM

மேட்டுப்பாளையம்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி, ஒருங்கிணைந்த காரமடை வட்டார வள மையத்தில் அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் 123 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவங்கப்பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ், பல்வேறு தலைப்புகளின் கீழ் செயல்பாடுகள் ஆண்டு முழுவதும் துவக்கப்பள்ளிகளில் நடக்கும்.
இத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த காரமடை வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீசுதா, தமிழ்செல்வி, சிவசங்கரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர் மைதிலி முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் சுமதி, சுரேஷ், வேல்விழி, சத்யா, சித்ரா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் போது மாணவர்களின் கற்றல் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம், மாணவர்களுக்கான தலைப்புகளை கொடுத்து செயல்வழி கல்வியை கற்றுக்கொடுப்பது எப்படி, மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பீடும் முறை உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் 340 ஆசிரியர்கள் 6 கட்டங்களாக கலந்து கொண்டனர்.