ADDED : செப் 08, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; தமிழகம் முழுவதும் அண்மையில் 'பணி ஆய்வாளர்கள்' பணியிடம் அரசால் நிரப்பப்பட்டது. இதில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணிகள், சாலை, குடிநீர் வசதி, கணினி பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் பல நூற்றுக்கணக்கான பணி ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், தலைமையில், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா முன்னிலையில் வரைபடம் வாயிலாக பயிற்சி அளித்தனர்.