/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடித்தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்ய பயிற்சி
/
மாடித்தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்ய பயிற்சி
மாடித்தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்ய பயிற்சி
மாடித்தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்ய பயிற்சி
ADDED : மே 18, 2025 11:00 PM
கோவை, ; கோவை, வேளாண் பல்கலை உயிரி தொழில்நுட்ப மையத்தில் மாடித்தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி நடந்தது. தாவர உயிரிதொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி துவக்கி வைத்தார்.
பயிற்சியில், வெட்டிவேரின் நன்மைகள், விவசாயி சாகுபடி முறைகள், வாசனை திரவியம் பிரித்தெடுத்தல், சோப்புகள், நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது, சாகுபடி பயிற்சி, வளர்க்க பயன்படுத்தப்படும் குழாய்களின் வகை, ஏற்றுமதி, மதிப்புக்கூட்டுதல், வேர் எடையைக் கண்காணித்தல், விற்பனை செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
எகோ கிரீன் யூனிட் திட்ட இயக்குநர் பாபு, உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராஜன்பாபு, இ-யுவா ஒருங்கிணைப்பாளர் பிருந்தா, விவசாயிகள் பங்கேற்றனர்.