/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
ADDED : ஆக 15, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், அடுமனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கிறது.
அடுமனை உணவுப் பொருட்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம், விரும்பத்தக்க வகையிலும், பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பது தான். இப்பயிற்சி, சிறு தொழில் முனைவோருக்கு, தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். வரும் 19, 20ம் தேதிகளில், ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க, தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு: 94885 18268.