தேங்காய் தொட்டியில் இருந்து பொருட்கள் தயாரிக்க பயிற்சி
தேங்காய் தொட்டியில் இருந்து பொருட்கள் தயாரிக்க பயிற்சி
ADDED : மார் 11, 2026 05:54 AM

கோவை: கோவை, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு (ஐ.எப்.ஜி.டி.பி.,) நிறுவனத்தில், பசுமைத் திறன் மேம்பாடு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஐ.எப்.ஜி.டி.பி., சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ், நுண் தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டது.
தேங்காய் சிரட்டை மற்றும் ஆகாயத் தாமரையைப் பயன்படுத்தி, கலைப் பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் இடைநின்றவர்கள், பழங்குடியினர், வேலைவாய்ப்பற்றவர்களில் இருந்து தலா 20 பேருக்கு 42 நாட்கள் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி பெற்றோர் உருவாக்கிய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் (பொ) யசோதா, முதுநிலை விஞ்ஞானிகள் நாகராஜன், ரேகா வாரியர், முதுநிலை திட்ட மேலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
