ADDED : செப் 11, 2026 07:24 PM
மேட்டுப்பாளையம்: பூஜைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் தொழில்முனைவோர் பயிற்சி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் உள்ள வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில், வரும் 18ம் தேதி நடக்கிறது.
இப்பயிற்சியில் மாட்டு சாணம் மற்றும் மரக்கழிவுகளைக் கொண்டு கணினி சாம்பிராணி, தூபக் குச்சிகள், கப் சாம்பிராணி, விபூதி, கொசு விரட்டி, அகர்பத்தி தயாரிப்பு மற்றும் இயந்திரத் தயாரிப்பு, பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பூஜைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் புதிய தொழில் தொடங்க விரும்புவோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும் தகவல்களுக்கு, 74184 70345, 94877 12210 என்ற செல்போன் எண்களை அணுகி விவரம் பெற்றுக்கொள்ளலாம் என வனக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
---
