ADDED : ஏப் 04, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், மசாலா பொடிகள் தயாரிக்க, இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் 8, 9ம் தேதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இதில், சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்புப் பொடி, சிக்கன் 65 பொடி ஆகிய மசாலா பொடிகள், ரெடி மிக்ஸ் பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.