/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி பழப்பொருள் தயாரிக்க பயிற்சி
/
காய்கறி பழப்பொருள் தயாரிக்க பயிற்சி
ADDED : மே 23, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வர்த்தக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்க, 2 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும் 27, 28ம் தேதிகளில், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.
இதில், உலர வைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், பழ மிட்டாய், தக்காளி கெட்சப் ஆகியவை தயாரிக்க பயிற்றுவிக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், வரிகள் உட்பட ரூ.1,770 கட்டணம் செலுத்தி, பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.