ADDED : ஏப் 05, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், ரெடிமிக்ஸ் உணவு தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும்,7, 8 தேதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.
தோசை மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிஸிபேளாபாத் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், கீர் மிக்ஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.
