/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெல்ல கற்கும் மாணவர்களை மேம்படுத்த பயிற்சி கையேடு
/
மெல்ல கற்கும் மாணவர்களை மேம்படுத்த பயிற்சி கையேடு
ADDED : ஜூலை 30, 2025 09:16 PM
கோவை; அரசுப்பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பின்தங்கிய மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்த, 'திறன்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகங்களும், ஆசிரியர்களுக்கான கையேடுகளும் தயாரிக்கப்பட்டு 9ம் வகுப்புக்கான கையேடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
'திறன்' பயிற்சிகளை உடனடியாக தொடங்க, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் கையேடுகளின் மென் பிரதிகள் (சாப்ட் காப்பி) ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது அச்சிடப்பட்ட கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதற்கட்டமாக, கோவை நகரம், பேரூர், எஸ்.எஸ்.குளம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலப் பாடப் புத்தகங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வழங்கினார்.