/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 20, 2024 10:10 PM

ஆனைமலை : வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமனையில், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு உள்ளிட்ட ஓட்டுச் சாவடிகளுக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டுப் பதிவின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல், ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளுக்கு, மண்டல அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை சட்டசபை தொகுதிக்கான, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் ஆனைமலை தாசில்தார் அலுவலத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி தலைமை வகித்தார்.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட் ஆகியவை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்தன. பயிற்சியில், ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பதட்டமான ஓட்டுச்சாவடிகளைக் கண்டறிதல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாளுதல், தேர்தல் நாள் அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

