/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி
/
தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 18, 2024 12:30 AM
கோவை:கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரங்களில், வேர் வாடல் நோய் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக உள்ளது.
அதனால், விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் வயல் பார்வையிடல் நிகழ்ச்சி, ஆனைமலை வட்டம் ஆலங்கடவு கிராமத்தில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் கொச்சி தென்னை வளர்ச்சி வாரியம், சார்பில் இப்பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, கோவை தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, பயிர் நோயியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் அருள்பிரகாஷ் ஆகியோர், தென்னையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், அவற்றின் அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து விரிவாக பேசினார்.