/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக பொறுப்பேற்ற நீதிபதிகளுக்கு பயிற்சி
/
புதிதாக பொறுப்பேற்ற நீதிபதிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 25, 2024 12:06 AM
கோவை : தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி காலிப்பணியிடம் நிரப்ப, 230 சிவில் நீதிபதிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 7ம் தேதி பொறுப்பேற்றனர்.
கோவை, ஜே.எம்:6, கோர்ட்டிற்கு ராஜீவ் காந்தி, ஜே.எம்:7, கோர்ட்டிற்கு, இந்திரஜித், ஜே.எம்:8, கோர்ட்டிற்கு சக்தி மஞ்சரி, கோவை நான்காவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு பிரவீன்குமார், கோவை ஐந்தாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு யாழினி, கூடுதல் மகிளா கோர்ட்டிற்கு சிந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
புதிய நீதிபதிகளாக பொறுப்பேற்ற இவர்களுக்கு, சென்னையிலுள்ள ஜூடிசியல் அகாடமியில் ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் கோவையில் பொறுப்பேற்றுக்கொண்டு, சென்னைக்கு சென்றனர்.