நாற்றங்காலில் மரக்கன்று உற்பத்தி குறித்து பயிற்சி
நாற்றங்காலில் மரக்கன்று உற்பத்தி குறித்து பயிற்சி
ADDED : பிப் 25, 2026 05:57 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், 2025 -- 26ம் ஆண்டின், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
காளியண்ணன்புதுாரில் நடந்த பயிற்சிக்கு, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார். வனத்துறை, வனவிரிவாக்கம் வனச்சரகர் கோகுல், நாற்றங்காலில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், பராமரிப்பு, தோட்டங்களில் மரக்கன்றுகள் பராமரிப்பு, மர பயிரின் இடைவெளியின் அவசியம், பாசன நீர் மேலாண்மை, மர பயிர்களில் கவாத்து செய்தல், பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, மர பயிர்களின் பங்கு மற்றும் வேளாண் காடுகள் அமைப்பதன் மூலம்விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் லாபம், வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
