/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பயிற்சி
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பயிற்சி
ADDED : அக் 16, 2025 09:02 PM

கோவை: தீபாவளியை முன்னிட்டு, கோவை மாவட்ட தீ தடுப்பு குழு சார்பில்,பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கோவை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையும், ஈரநெஞ்சம் அறக்கட்டளையும் இணைந்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.
தீபாவளி பண்டிகையின்போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், நிதானத்துடன் அதை அணுகுவது மற்றும் தீயை கட்டுப்படுத்துவது குறித்து தெளிவாக விளக்கினர்.
தீயணைப்பு துறையின் பணிகள், அவசரகால அழைப்பு எண்கள் மற்றும் தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களின் கடமைகள் குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.