sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காண பயிற்சி

/

 பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காண பயிற்சி

 பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காண பயிற்சி

 பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காண பயிற்சி


ADDED : பிப் 19, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 19, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை திறம்பட கையாள்வது தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடந்தது.

கலெக்டர் பவன்குமார் கூறுகையில், “பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு நேரில் சென்று, உண்மையில் பதற்றமான சூழ்நிலை உள்ளதா என்பதை ஆய்வு செய்து, தனித்தனி அறிக்கையை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் மற்றும் சமூக ரீதியாக பிரச்னை எழ வாய்ப்புள்ள இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒரே மையத்தில் அதிக ஓட்டுச்சாவடி உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.

எஸ்.பி.,கார்த்திகேயன் பேசுகையில், “உண்மையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை மட்டுமே பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக குறிப்பிட வேண்டும். சில இடங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அவை பதற்றமான பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. உயிர் சேதம் அல்லது பாதுகாப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களை மட்டுமே சரியாக பதிவு செய்ய வேண்டும்,” என்றார்.

இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us