/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயறு வகைகளை மதிப்பூட்ட பயிற்சி
/
பயறு வகைகளை மதிப்பூட்ட பயிற்சி
ADDED : பிப் 20, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: வேளாண் பல்கலையில், பாரம்பரிய பயறு வகைகளை மதிப்பூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி நடந்தது.
விவசாயிகள், தொழில்முனைவோர் பங்கேற்ற இப்பயிற்சியில், ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரித்தல், பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, ஊட்டச்சத்து மிக்க பயறு வகைகள், அவற்றை மதிப்புக்கூட்டல், வாழ்க்கை முறை, நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பயிர் மேலாண்மை துறை இயக்குநர் கலாராணி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய தலைவர் கார்த்திகேயன், பேராசிரியர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்று விளக்கினர்.

