ADDED : ஜூலை 09, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: நிலச்சரிவு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முபா -திகாகோ ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, மழை பொழிவின் காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சில்சார் - கோவை(12516) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கோவை - சில்சார்(12515) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வரும், 13ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.