/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிவோருக்கு இட மாறுதல்
/
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிவோருக்கு இட மாறுதல்
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிவோருக்கு இட மாறுதல்
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிவோருக்கு இட மாறுதல்
ADDED : பிப் 01, 2024 11:12 PM
கோவை:கோவை மாவட்டத்தில், மூன்றாண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளை வேறிடத்துக்கு மாற்ற, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அதிகாரிகளை, அவர்களது மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றினால், அவர்களை இடம் மாற்ற வேண்டும். தேர்தலுடன் நேரடி தொடர்புள்ள எந்த அதிகாரியும் தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் இருக்கக் கூடாது என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை உயரதிகாரிகளுக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் அவர்களை இட மாறுதல் செய்ய வேண்டும். அதற்கான பட்டியலை, மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

