/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை கமிஷனர்கள் பணியிட மாற்றம்
/
துணை கமிஷனர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜன 08, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகரில் தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மாநகர வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கியூ பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி., சசிமோகன், கோவையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள, சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.