/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த தனி துணை கலெக்டர்கள் மாற்றம்
/
கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த தனி துணை கலெக்டர்கள் மாற்றம்
கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த தனி துணை கலெக்டர்கள் மாற்றம்
கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த தனி துணை கலெக்டர்கள் மாற்றம்
ADDED : அக் 30, 2024 09:23 PM
கோவை; கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தனி துணை கலெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில், புதிதாக தனி துணை கலெக்டர் (சப்-கலெக்டர்) பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அப்பணிக்கு, சேலம் மாவட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்த ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த பாபு, கோவை மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆய்வுக்குழு அலுவலர் நிறைமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரியும் சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக மாற்றப்பட்டிருக்கிறார்.
இப்பதவியில் இருந்த முருகேசன், கிருஷ்ணகிரிக்கு நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் அமுதா பிறப்பித்திருக்கிறார்.