/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : மார் 08, 2024 12:24 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கிழக்கு மற்றும் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த வெங்கடேசன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த லோகேஸ்வரி ஆகியோர் தேர்தலையொட்டி மாறுதல் செய்யப்பட்டனர்.
துடியலுார் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும்; காங்கேயம் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, கிழக்கு மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.