/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
/
போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : அக் 03, 2024 11:54 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், சூலுார் எஸ்.ஐ., காலேப், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மேட்டுப்பாளையம் மகளிர் போலீஸ் எஸ்.ஐ., மரியம், கோமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
எஸ்.ஐ.,க்கள் மகாலிங்கபுரம் சிலம்பரசன், ஆழியாறு பாலமுருகன், ஆனைமலை சுரேஷ் ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், ஆனைமலை போலீஸ் எஸ்.ஐ., ஜெகதீஸ், சூலுாருக்கும், வால்பாறை எஸ்.ஐ., பழநி, நெகமத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கிழக்கு எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி வால்பாறைக்கும், கிணத்துக்கடவு எஸ்.ஐ., சக்திவடிவேல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.