/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பணிபுரியும் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
/
கோவையில் பணிபுரியும் துணை தாசில்தார்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 26, 2025 11:32 PM
கோவை; கோவையில் பணிபுரியும், 17 துணை தாசில்தார்களுக்கு புதிய பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட வருவாய்துறை பிரிவில் துணை தாசில்தார்களாக பணிபுரிந்து வந்த கவிதா கலெக்டர் அலுவலக சமூகப்பாதுகாப்பு திட்டத்துக்கும்,முருகன்,பேரூர் தாலுகா தேர்தல் பிரிவிற்கும், ஹேமாவதி சூலுாார் வட்ட வழங்கல் அலுவலராகவும்.
செல்லதுரை மதுக்கரை தேர்தல் பிரிவுக்கும், அஜீபா ஆனைமலை தாலுகா தேர்தல் பிரிவிற்கும், சாரதா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக துணைதாசில்தாரகவும்.
அம்சவேணி, கலெக்டர் அலுவலக' ஈ 'பிரிவு தலைமை உதவியாளராகவும், யாஸ்மின் நயமுனிஷா அன்னுார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், ராமலட்சுமி, அனுப்பர் பாளையம் மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர வடக்கு தாலுகா தேர்தல் பிரிவிலுள்ள தனிதுணை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும் படை துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் பிரிவில் பறக்கும் படை தாசில்தாராக இருந்த லாரன்ஸ், மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக ஈ பிரிவு தலைமை உதவியாளராக இருந்த குபேந்திரன், கோவை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவு தனிதுணை தாசில்தாராகவும், பேரூர் தாலுகா தேர்தல் பிரிவு தனிதுணை தாசில்தார் சுமதி.
சூலுாார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சூலுார் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜஹான், தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ்குமார், கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு தலைமை உதவியாளராகவும், பேரூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராக இருந்த ராஜகீர்த்திகா மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.