/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்
/
சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்
சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்
சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்
ADDED : மார் 03, 2024 08:38 PM
சூலுார்;சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதை ஒட்டி, ஊரக வளர்ச்சி துறையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சூலுாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) சிவகாமி, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கும், சுல்தான்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி சூலுாருக்கும் பிப்., முதல் வாரத்தில் மாற்றப்பட்டனர்.
பொறுப்பேற்ற, 20 நாட்களில், ரேவதி மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பொறுப்பேற்றுக்கொண்டார். ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பணிகள் தேக்கமடைந்துள்ளன.

