ADDED : மார் 17, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி உதவி கமிஷனராக (வருவாய்) இருந்த மகேஷ் கனகராஜ், திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனராக (பணிகள்) இட மாற்றம் செய்யப்பட்டார். திருச்சியில் பணிபுரியும் சண்முகம், கோவைக்கு நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை, பிப். 25ல் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்திருந்தார். இரு அதிகாரிகளும் இட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்குச் செல்லாமல் இருந்தனர்.
இச்சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஒரு நாள் முன்னதாக, 14ம் தேதி குறிப்பிடப்பட்டு, உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
இவர் வடக்கு மண்டல உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அப்பணியிடம் காலியாக உள்ளது. உதவி கமிஷனர் (நிர்வாகம்) பணியிடமும் காலியாக இருக்கிறது.
