ADDED : மார் 31, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சகோதரி அறக்கட்டளை, திருநங்கைகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சகோதரி அறக்கட்டளை கல்கி சுப்ரமணியம் மற்றும் திருநங்கைகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த சட்டம், 2026, திருநங்கைகளின் சுய அடையாள உரிமைக்கும் கண்ணியத்துக்கும் எதிராக உள்ளது. இந்த மக்கள் விரோத சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
