/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி
/
பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி
ADDED : மார் 02, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிங்காநல்லுாரை சேர்ந்த திருநங்கை மாணவி தேர்வு எழுதினார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. கோவையில் பல்வேறு மையங்களில் தேர்வு நடக்கிறது. அதில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அஜிதா, 17 என்ற திருநங்கையும் தேர்வு எழுதி உள்ளார். இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
அஜிதா கூறுகையில், ''தமிழ்பாடத்துக்கான தேர்வு நன்றாக இருந்தது. இதில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கிடைக்கும்,'' என்றார்.

